பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 March 2022 11:50 PM IST (Updated: 23 March 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு நடந்துள்ளது.

க. பரமத்தி, 
சின்னதாராபுரம் அருகே தும்பிவாடி, சிவன் காலனியைச் சேர்ந்தவர் ராணி (வயது 51). இவர் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்து விட்டு தனது ஸ்கூட்டரில் சிவன் காலனியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது க.பரமத்தியிலிருந்து இவரை 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். நிமந்தபட்டி அருகே வந்தபோது ராணியை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ½ பவுன் திருமாங்கல்யம் மற்றும் ஸ்கூட்டரை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ராணி சின்னதாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு மூலம் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story