யூரியாவை நாகை கலெக்டர் பார்வையிட்டார்


யூரியாவை நாகை கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 23 March 2022 11:51 PM IST (Updated: 23 March 2022 11:51 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் துறைமுகத்துக்கு வந்த 44 லட்சம் டன் யூரியாவை நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார்.

வெளிப்பாளையம்;
காரைக்கால் துறைமுகத்துக்கு வந்த 44 லட்சம் டன் யூரியாவை நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டார். 
யூரியா உரம்
தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு  மொத்தம் 44 லட்சத்து 36 ஆயிரத்து 905  டன் இப்கோ யூரியா உரம் வெளிநாட்டிலிருந்து மத்திய அரசு மூலம் காரைக்கால் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. 
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோளின்படி, தமிழகத்துக்கு 22 லட்சத்து 336 ஆயிரத்து 905  டன் இப்கோ யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் துறைமுகத்துக்கு வந்த உரமூட்டைகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
இருப்பு வைக்கப்படும்
நாகை மாவட்டத்திற்கு 2022-23-ம் ஆண்டு பருவத்திற்கு 8 ஆயிரத்து 740  டன் யூரியா, 3 ஆயிரத்து 200 டன் டி.ஏ.பி, 3 ஆயிரத்து 670 டன் பொட்டாஷ் மற்றும் 1680 டன் காம்ப்ளஸ் உரங்கள் ஒதுக்கீடு செய்து தர மாநில அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. இதில் முதற் கட்டமாக மாவட்டத்திற்கு 140  டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உரங்கள் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்படும். 
 இதுவரை காரைக்கால் துறைமுகத்திலிருந்து வேலூர், விருதாசலம், கடலூர், விருதுநகர் மாவட்டங்களுக்கு 457  டன் யூரியா அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெடர் அருண்தம்புராஜ் கூறினார். ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அக்கண்டராவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், காரைக்கால் துறைமுக பொது மேலாளர் ராமலிங்கம், உதவி துணைத்தலைவர் ராஜேஸ்வரரெட்டி மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

Next Story