அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
நீடாமங்கலத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் இடையர் நத்தம், தெற்குநத்தம், மூவாநல்லூர், அசேஷம் ஆகிய திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கட்ட 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் அரவைக்காக நீடாமங்கலத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story