புதுக்கோட்டை நகராட்சியை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் சொத்து வரி ரூ.17½ லட்சம் செலுத்தாமல் நிலுவை தொகை வைத்ததாக கூறி புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் கடந்த 21-ந் தேதி பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் கேபிள்கள் உள்பட வயர்களை ஜப்தி செய்தனர். இந்த நிலையில் சொத்து வரி ஏற்கனவே செலுத்தப்பட்டதாக கூறி சீலை அகற்ற பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து பொருட்களை எடுத்து சென்றதாகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிகாரிகள் சங்க மாநில துணை செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். அகில இந்திய துணை தலைவர் சசிக்குமார் தொடக்க உரையாற்றினார். ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்க மாநில செயலாளர் காமராஜ் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் நிர்வாகி மகேஷ்வரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story