விராலிமலை அருகே அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தியவரால் பரபரப்பு


விராலிமலை அருகே அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தியவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 March 2022 12:07 AM IST (Updated: 24 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தனிநபர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை:
பள்ளி சுற்றுச்சுவர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியம் அன்னதானப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சத்து 57 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் சுற்றுச்சுவர் கட்டும் பணியானது மீனவேலி ஊராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது பள்ளியின் அருகே உள்ள தனிநபர் ஒருவர் பள்ளியின் தெற்குபுறத்தில் உள்ள இடத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். எனவே அங்கு சுற்றுச்சுவர் கட்டக்கூடாது என பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் 
இதனையடுத்து ஊராட்சி மன்றத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து அனுமதி பெற்று மீண்டும் சுற்றுச்சுவர் கட்டும் பணியானது நேற்று காலை நடைபெற்றது. பணியானது ஊராட்சி மன்ற தலைவர் பாலம்மாள் மற்றும் ஊராட்சி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு நடைபெற்று வந்தது. அப்போது மீண்டும் அதேபகுதியை சேர்ந்த நபர் குடும்பத்துடன் வந்து சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் ஆகியோர் அந்த நபரிடம் நாங்கள் அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்து அனுமதி பெற்ற பின்னர் தான் இந்தபணியை மீண்டும் தொடங்கினோம் என கூறினர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து குடும்பத்துடன் கலைந்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story