ஆலங்காயத்தில் ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாம்


ஆலங்காயத்தில் ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 24 March 2022 12:07 AM IST (Updated: 24 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயத்தில் ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு முகாம் நடந்தது.

வாணியம்பாடி

ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து நடத்தும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஆதார் அட்டை எடுக்கும் சிறப்பு சேவை முகாம் நேற்று தொடங்கப்பட்டது. ஆலங்காயம் பேரூராட்சி தலைவர் தமிழரசி வெங்கடேசன், துணைத்தலைவர் ஸ்ரீதர், என்.டி.டி.யு.சி மாநிலத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் தலைமைஆசிரியர் மகேஷ்குமார், ஆலங்காயம் பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அடுத்த 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில், புதிதாக ஆதார் கார்டு விண்ணப்பித்தல், ஆதார் அட்டையில் பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண் சேர்த்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக ஆதார் கார்டு விண்ணப்பிக்கின்ற அங்கன்வாடி குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் கார்டுகள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதார் சேவையின் தேவையை பொறுத்து முகாம் நடைபெறும் நாட்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story