ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வெடி வைத்த வாலிபர் கைது
ஆம்பூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வெடி வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கம் பகுதியில் உள்ள ஏரியில் அதிக அளவில் வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரியவரிக்கம் அண்ணா நகரை சேர்ந்த சங்கர் என்பவரது கறவைமாடு அப்பகுதயில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை மாடு கடித்தது. இதனால் வெடிகுண்டு வெடித்து மாட்டின் தாடை கிழிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சங்கர் குடும்பத்தினர் மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து,வன விளங்குகளை வேட்டையாட வெடி வைத்ததாக மிட்டாளம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story