இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா


இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
x
தினத்தந்தி 24 March 2022 12:12 AM IST (Updated: 24 March 2022 12:12 AM IST)
t-max-icont-min-icon

முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி இலுப்பூர், சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பூக்களை தட்டுகளில் சுமந்தவாறு இருந்திரப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் போலீசார் செய்திருந்தனர்.

Next Story