வடகாடு பகுதியில் பூக்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
பூக்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலையடைந்துள்ளது.
வடகாடு:
வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காக்கரட்டான், சென்டி, அரளி, ரோஜா, கோழிக்கொண்டை போன்ற பூச்செடி வகைகள் விவசாயிகள் மூலமாக அதிக அளவில் பயிரிடப்பட்டு பராமரித்து வரப்படுகிறது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு கணிசமான வருமானம் வந்து கொண்டிருந்த நிலையில் கொரோனா எனும் பெரும் தொற்றால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே உரிய விலை இன்றி குப்பைகளில் கூட கொட்டப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பெரும் தொற்று பெருமளவு குறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ள போதிலும் விவசாயிகளது வாழ்வாதாரம் உயரவில்லை. கடந்த சில வாரங்களில் மல்லிகை, காக்கரட்டான் உள்பட பூக்கள் கிலோ ரூ.300 மற்றும் ரூ.400 வரை விற்பனை ஆகி வந்த நிலையில் தற்போது, மல்லிகை கிலோ ரூ.200- க்கும், காக்கரட்டான் கிலோ ரூ.60-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இப்பகுதிகளில் நறுமண தொழிற்சாலை அமைத்து கொடுத்தால் இதன் மூலமாவது பூக்கள் விலை சிறிது உயர்வு பெரும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் நிலவி வருகிறது.
Related Tags :
Next Story