திருச்சி மாநகராட்சி சார்பில் வாகனம் நிறுத்த கட்டண வசூல் உரிம ஏலம்

திருச்சி, மார்ச்.24-
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட ரெங்கநாதர் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பஸ்கள், வேன்கள், தனியார் பஸ்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்வது உள்பட பல்வேறு இனங்களுக்கான மூன்றாண்டு கால குத்தகை ஏலம் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அரியமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட காந்திமார்க்கெட் தினசரி கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமம், ஜி கார்னர் பகுதியில் அமைந்துள்ள நவீன மாட்டிறைச்சி கூடத்தில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமம் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கான 3 ஆண்டு கால குத்தகை ஏலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் முன்னிலையில் உதவி ஆணையர் (வருவாய்) பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இந்த ஏலத்தில் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Tags :
Next Story