கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர் ராமர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், ஜனநாயக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வடமலை, சக்கரவர்த்தி, செல்வராசு, குணசேகரன், பரமகுரு, முத்துவேல், சண்முகம், தேவராஜன், ராஜசேகர், குணசேகரன், கனகவேல், மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2016-17-ல் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்,
2021-ல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். விவசாய மின்மோட்டார்களுக்கு மின் மீட்டர் பொருத்துவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து கோட்டாட்சியர் ராம்குமார் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப் படுத்தினார்.
தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர். அதனை பெற்ற அவர், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story