பெட்ரோல், டீசல் விலை உயர்வு


பெட்ரோல், டீசல் விலை உயர்வு
x
தினத்தந்தி 23 March 2022 6:57 PM GMT (Updated: 23 March 2022 6:57 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

திருச்சி, மார்ச்.24-
தமிழகத்தில் 137 நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் வீதம் உயர்ந்தது. இந்தநிலையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் விலை ஏற்றம் கண்டுள்ளது. கச்சா எண்ணெயின் விலை உயர்வை காரணம் காட்டி தற்போது பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. அதன்படி திருச்சியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் 102 ரூபாய் 61 காசுக்கு விற்பனையானது. டீசல் 92 ரூபாய் 68 காசுக்கு விற்பனையானது. இதன் விலை நேற்று லிட்டருக்கு 76 காசுகள் வீதம் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 37 காசுக்கும், டீசல் 93 ரூபாய் 44 காசுக்கும் விற்பனையானது. இதேபோல் ஹிந்துஸ்தான் பெட்ரோல் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் 102 ரூபாய் 58 காசுக்கும் டீசல் 92 ரூபாய் 65 காசுக்கும் விற்பனையானது. இதன் விலை நேற்று லிட்டருக்கு 76 காசுகள் வீதம் விலை உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 34 காசுக்கும், டீசல் 93 ரூபாய் 41 காசுக்கும் விற்பனையானது. பெட்ரோல், டீசல் தொடர் விலை ஏற்றம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

Next Story