பஸ்சில் 2 பெண்கள் ஒரு குழந்தையிடம் 12 பவுன் நகை அபேஸ்


பஸ்சில் 2 பெண்கள் ஒரு குழந்தையிடம்  12 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 24 March 2022 12:27 AM IST (Updated: 24 March 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் பஸ்சில் 2 பெண்கள், ஒரு குழந்தையிடம் 12 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்

குழித்துறை,:
மார்த்தாண்டத்தில் பஸ்சில் 2 பெண்கள் ஒரு குழந்தையிடம் 12 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
பஸ்சில் நகை அபேஸ்
மார்த்தாண்டம் வெட்டுமணியில் தூய அந்தோணியார் திருத்தலம் உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த ஆலயத்துக்கு ஏராளமானோர் வழிபாடு நடத்த வந்தனர்.
பிறகு வழிபாடு முடிந்ததும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் ஒரு சேர வெட்டுமணியில் இருந்து பஸ்சில் ஏறினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் முண்டியடித்துக் கொண்டு பஸ்சுக்குள் சென்றனர். இந்தநிலையில் பஸ்சின் முன்பக்கத்தில் ஏறிய 2 பெண்கள், நகையை காணவில்லை, யாரோ பறித்து விட்டனர் என சத்தம் போட்டனர். இந்த பரபரப்புக்கு இடையே குழந்தையின் கழுத்தில் இருந்த நகையையும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பறித்து விட்டனர் என்ற சத்தம் கேட்டது. எனவே பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் விசாரணை
இதனால் பஸ்சை டிரைவர் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். அதே சமயத்தில் பஸ்சில் இருந்து யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனை தொடர்ந்து போலீசார் பயணிகளிடம் சோதனை நடத்தினர். பெண்கள் அதிகமாக இருந்ததால் பெண் போலீசார் மூலம் சோதனை நடந்தது. ஆனால் பறிக்கப்பட்ட நகைகள் சிக்கவில்லை. நகையை பறித்ததும் வடநாட்டை சேர்ந்த கும்பல் வெளியே நின்றவர்களிடம் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், நகையை பறிகொடுத்தவர்கள் திங்கள்சந்தையை சேர்ந்த மேரிதங்கம், குளச்சல் பகுதியை சேர்ந்த ஜாய்ஸ் மற்றும் ஒரு குழந்தை என்பது தெரியவந்தது. அதே சமயத்தில் மேரி தங்கத்திடம் இருந்து 6 பவுன் சங்கிலியும், ஜாய்ஸிடமிருந்து 5 பவுன் சங்கிலியும், குழந்தையிடம் இருந்து 1 பவுன் சங்கிலியும் பறிபோகி உள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர்.
----

Next Story