அன்னவாசலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அன்னவாசலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 12:30 AM IST (Updated: 24 March 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்னவாசல்:
அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஆறுமுகம், பொருளாளர் சந்திரசேகரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொருளாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களை காலை 7 மணிக்கு வர வேண்டும் என நிர்ப்பந்தம் செய்வதையும், அதனை மீண்டும் காலை 9 மணிக்கு உடனே மாற்றிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சட்ட கூலி ரூ.273-ஐ முழுமையாக வழங்கிட வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை அன்னவாசல், இலுப்பூர் பேரூராட்சியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெரிய ஊராட்சிகளில் இதுவரை 40 நாள் முதல் 55 நாட்கள் தான் வேலை பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு சுழற்சிமுறை இல்லாமல் தொடர்ந்து நூறுநாள் வேலை வழங்க வேண்டும். தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் 50 நபர்கள் மட்டும் வேலை என்பதை மாற்றி அனைவருக்கும் 100 நாள் வேலை என்பதை உறுதிபடுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சம்பள பாக்கியை உடனே நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் பெண்கள் உள்பட திரளான விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Next Story