தண்ணீர் சிக்கனம் குறித்து ஊமை நாடகம் நடத்தி அசத்திய மாணவர்கள்


தண்ணீர் சிக்கனம் குறித்து ஊமை நாடகம் நடத்தி அசத்திய மாணவர்கள்
x
தினத்தந்தி 24 March 2022 12:36 AM IST (Updated: 24 March 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஊமை நாடகம் நடத்தி மாணவர்கள் அசத்தினர்.

கறம்பக்குடி:
கறம்பக்குடி மருத்துவர் காலனி தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக தண்ணீர் தினம் மற்றும் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் தண்ணீர் சிக்கனத்தின் தேவையை ஊமை நாடகமாக நடித்துக் காட்டினர். மரம் நமக்கு வரம் பற்றிய கவிதை உரையாடலை தன்னார்வலர் அனுசியா நிகழ்த்தினார். மேலும் மாணவ- மாணவிகள் பங்கேற்ற சிட்டுக்குருவி அழிவைப்பற்றி நாடகம் இயற்கை அன்னை நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தன்னார்வலர் சாலினி நன்றி கூறினார்.

Next Story