அரசுத்துறை வாகன டிரைவர்கள் கலெக்டரிடம் மனு


அரசுத்துறை வாகன டிரைவர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 24 March 2022 12:37 AM IST (Updated: 24 March 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

அரசுத்துறை வாகன டிரைவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் தலைவர் சகாதேவன் தலைமையில், அச்சங்கத்தினர் நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத்துறை வாகனங்கள் நிறுத்தும் இடத்தை கூட்டங்கள் நடத்த பயன்படுத்தப்படுவதால், வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் நிற்கின்றன. எனவே, கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு வாகனங்களை நிறுத்த மேற்கூரை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அரசுத்துறை வாகனங்களில் சிறு பழுதுகள் உள்ளிட்டவற்றை சரி செய்ய திருச்சியில் இருந்து வரும் நடமாடும் பணிமனை வாகனத்தை தண்ணீர்பந்தல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தாமல், கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத்துறை வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் அனைவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டில் எளம்பலூரில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும். வீட்டுமனைக்காக அரசு நிர்ணயம் செய்யும் நில மதிப்பு தொகையை செலுத்துகிறோம் என்று கூறப்பட்டிருந்தது.


Next Story