கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
பருத்தியூர் ஊராட்சியில் குறும்படத்தின் மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
குடவாசல்:
குடவாசல் ஒன்றியம் பருத்தியூர் ஊராட்சியை சேர்ந்த ஆவணம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரசார குறும்படம் ஒளிபரப்பு நடந்தது. இதில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல், முககவசம் அணிதல் குறித்த தமிழக முதல்-அமைச்சரின் ஆலோசனைகள் மற்றும் மருத்துவத்துறையின் வழிகாட்டுதல்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தின் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் குறும்படத்தை கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story