வெறிநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் செத்தன


வெறிநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 24 March 2022 12:39 AM IST (Updated: 24 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

வெறிநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் செத்தன

தொட்டியம், மார்ச்.24-
தொட்டியம் அருகே உள்ள கார்த்திகைபட்டியைச் சேர்ந்தவர் தவசுமணி. இவரது மனைவி புள்ளாச்சி (வயது 47). இவர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுவிட்டார். பின்னர் வீடு திரும்பிய அவர் தோட்டத்தில் உள்ள ஆடுகளை பார்க்க சென்றார். அப்போது,  பட்டிக்குள் 13 ஆடுகள் செத்து கிடந்தன. பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்ததில் அவகைள் செத்துள்ளது தெரியவந்தது.  இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

Next Story