சாலையோர கடையை சூறையாடிய மர்ம நபர்கள்
திருத்துறைப்பூண்டி அருகே சாலையோர கடையை மர்ம நபர்கள் சூறையாடினர். இதனால் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே சாலையோர கடையை மர்ம நபர்கள் சூறையாடினர். இதனால் சாலை மறியல் போராட்டம் நடந்்தது. இதில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடையை சூறையாடினர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் நடுதெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 62). இவர் ராயநல்லூர் கடைத்தெருவில் மாலை நேரத்தில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ராயநல்லூர் நட்டுவாய்க்கால் பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் போண்டா, பஜ்ஜி வேண்டும் என்று ரத்தினவேலிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரத்தினவேலுவின் கடையை 5 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்து பொருட்களை சூறையாடினர். மேலும் அவருடைய மோட்டார் சைக்கிளையும் சாலையில் போட்டு உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
இதையடுத்து நல்லூரில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தின் சார்பில் கடையை அடைத்து திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் ராயநல்லூர் கடைத்தெருவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர் வீரபரஞ்சோதி உள்ளிட்ட
25-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து ரத்தினவேலு அளித்த புகாரின் பேரில் ஆலிவலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story