கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிப்பு


கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 March 2022 1:00 AM IST (Updated: 24 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

300 பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இதன் அடுத்த கட்டமாக கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயில்பட்டி, 
300 பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இதன் அடுத்த கட்டமாக கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் 
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு, கடந்த 21-ந் தேதி முதல் சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனால் சுமார் 1 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 
சுற்றுப்புறச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்,  சரவெடி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
கஞ்சி தொட்டி 
போராட்டத்தின் 2-ம் கட்டமாக இன்று (வியாழக்கிழமை), மூடப்பட்டு இருக்கும் பட்டாசு ஆலைகளின் சாவிகளை விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சாவி ஒப்படைப்பு போராட்டம் கைவிடப்பட்டது. 
இந்தநிலையில் அடுத்த கட்டமாக, நாளை (வெள்ளிக்கிழமை) வெம்பக்கோட்டையில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தை நடத்துவது என பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story