வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 24 March 2022 1:11 AM IST (Updated: 24 March 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி

வெளிப்பாளையம்;
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் (வயது25). பட்டதாரி வாலிபரான இவர் கூகுள் மூலம் வேலை தேடி வந்தார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி இளவரசனின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட நபர் துபாய் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் ஸ்டோர் கீப்பர் பணி காலியாக உள்ளது. இந்த பணிக்கு முன்பணம் கட்ட வேண்டும் என்றார். இதை நம்பிய இளவரசன் 14 தவணையாக ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 100-ஐ கூகுள் பே வாயிலாக அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் பணி நியமன ஆணை வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த இளவரசன் அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த இளவரசன் நாகை சைபர்க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் பணம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story