விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 1:23 AM IST (Updated: 24 March 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண் பாலியல் பலாத்காரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி விருதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
இளம்பெண் பாலியல் பலாத்காரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி விருதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பலாத்கார வழக்கு 
விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மாநில துணைத்தலைவர் ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் வீரபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க அமைப்பாளர் சக்திவேல், மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, மதுரை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் செல்வம் மற்றும் மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்
புரட்சி பாரதம் 
அதேபோல விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு புரட்சி பாரதம் கட்சியினர் மாவட்ட தலைவர் பிரவீண் குமார் தலைமையில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story