பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
சாத்தூர் அருகே பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா உப்பத்தூர், அய்யம்பட்டி ஆகிய கிராமங்கள் அடங்கிய உப்பத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நிர்மலாகடற்கரைராஜ் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியர் புஷ்பா மற்றும் வட்டாட்சியர் சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர். முகாமில் 63 மனுக்கள் பெறப்பட்டதில் 36 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி, வருவாய் ஆய்வாளர் ரேணுகாதேவி, கிராம நிர்வாக அலுவலர் ஜான்பாபா மற்றும் நில அளவை பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தனி வட்டாட்சியர் (சமூக நல பாதுகாப்பு திட்டம்) வெங்கடேஷ் செய்திருந்தார்.
Related Tags :
Next Story