அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 ேபரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கால வரையற்ற போராட்டம் காரணமாக கடந்த 21-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன், தாயில்பட்டி, கோட்டையூர், பசும்பொன் நகர், வடக்குத்தெரு, எஸ்.பி.எம்.தெரு, உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த கோட்டையூரை சேர்ந்த தர்மராஜ் (வயது 45), வடக்கு தெருவைச் சேர்ந்த முத்துராஜ் ( 40) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story