தஞ்சையில் புத்தக கண்காட்சி
தஞ்சையில் புத்தக கண்காட்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1 லட்சம் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சையில் புத்தக கண்காட்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1 லட்சம் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புத்தக கண்காட்சி
தஞ்சை தெற்குவீதி அருகே மானோஜியப்பா வீதியில் உள்ள ராமசாமி பத்தர் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சம் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தக விற்பனை கண்காட்சியில் திருக்குறள், ஜோதிடம், ஆன்மிகம், பொன்னியின்செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம், ராஜேந்திரசோழன், நீங்களும் ஓர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம், இந்திய தேர்தல் வரலாறு, பொதுஅறிவு, மருத்துவம், தையல்கலை, சட்டபுத்தகம், நாவல், கவிதைகள், இலக்கியம், சுயமுன்னேற்றம், பொது கட்டுரைகள், குழந்தை வளர்ப்பு, கதை, சமையல், வரலாறு, போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன்
மேலும் சாண்டில்யன், கல்கி, கண்ணதாசன், வாலி, வைரமுத்து, சுஜாதா, பாலகுமாரன், ரமணிசந்திரன், இந்திரா சவுந்தர்ராஜன், ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களும், பல்வேறு பதிப்பகத்தின் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன், மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள் பாகம்-1, வெங்கடேசன் எம்.பி.யின் வேள்பாதி மற்றும் பல்வேறு தலைவர்களை பற்றிய வரலாறுகளும் இடம் பெற்றுள்ளன. இங்கு விற்கப்படும் அனைத்தும் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை உண்டு. அனுமதி இலவசம். இந்த கண்காட்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி வரை நடைபெறும் என புத்தக கண்காட்சி பொறுப்பாளர் விஜயரங்கன் கூறினார்.
Related Tags :
Next Story