இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்


இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 1:50 AM IST (Updated: 24 March 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பேட்டையி்ல் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அய்யம்பேட்டை:
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை கண்டித்து நேற்று மாலை அய்யம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஸ் நிறுத்தம் அருகே இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேக் அப்துல்லா தலைமை தாங்கினார். ஜமாத் சபை தலைவர்கள் சிம்லா நஜீப், வாலன் அக்பர், சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் முபாரக், மனிதநேய ஜனநாயக கட்சி வர்த்தக அணி செயலாளர் யூசுப் ராஜா, முகமது இப்ராகிம், பக்கீர் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பாபநாசம் தொகுதி செயலாளர் சலீம் வரவேற்றார். 
இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் காதர்பாட்சா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் குலாம் உசேன், நேஷனல் வுமன்ஸ் பிரண்ட் அமைப்பின் மாவட்ட தலைவி ஷாஜிரா பேகம் ஆகியோர் கலந்துகொண்டு ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை கண்டித்து  கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆதம் மாலிக் ரஹ்மானி நன்றி கூறினார்.

Next Story