மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை


மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
x
தினத்தந்தி 23 March 2022 8:44 PM GMT (Updated: 23 March 2022 8:44 PM GMT)

மீனாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி மீனாட்சி அம்மன்கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. அப்போது கிடைக்கப்பெற்ற காணிக்கைகள் மீனாட்சி அம்மன்கோவில் பழைய திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. அதில் 83 லட்சத்து 28 ஆயிரத்து 234 ரூபாயும், தங்கம் 660 கிராம், வெள்ளி 1 கிலோ 280 கிராம் கிடைக்க பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story