வீடு புகுந்து பெண்ணை தாக்கி 13½ பவுன் நகை பறிப்பு


வீடு புகுந்து பெண்ணை தாக்கி 13½ பவுன் நகை பறிப்பு
x

மதுரையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 13½ பவுன் நகையை பறித்து சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை
மதுரையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 13½ பவுன் நகையை பறித்து சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை பறிப்பு
மதுரை டி.வி.எஸ்.நகர், முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாஷ். இவரது மனைவி புவனா (வயது 29). சம்பவத்தன்று அதிகாலை அவர் வீட்டில் இருந்தபோது மர்மநபர் ஒருவர் திடீரென்று உள்ளே புகுந்தார். அவர் புவனாவை தாக்கி அவர் அணிந்திருந்த 13½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டார்.
 இதுகுறித்து அவர் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கி 13½ பவுன் நகையை பறித்து சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே கல்விநகரை சேர்ந்தவர் பசும்பொன்(64). இவரது மனைவி ரேணுகாதேவி(61). இருவரும் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரேணுகாதேவி அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். 
இதுகுறித்து பசும்பொன் கொடுத்த புகாரின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story