சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் வரலாற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு


சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் வரலாற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 24 March 2022 2:20 AM IST (Updated: 24 March 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் வரலாற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

சுசீந்திரம், 
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் வரலாற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ஏற்பாடு
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களின் தல வரலாற்றை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து கோவிலின் சிறப்பு, திருவிழாக்கள் குறித்து பக்தர்கள் அறிந்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலாக திகழும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலின் தல வரலாற்றை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் கோவில் முகப்பில் 60 இன்ச் டி.வி. அமைக்கப்பட உள்ளது. 
இதில் கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் 15 நிமிடத்தில் ஒரே நேரத்தில் 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் ஒலி-ஒளி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.
 இந்த ஒலி-ஒளி அமைப்பானது கோவில் திறந்திருக்கும் நேரத்தில் பக்தர்கள் வருகையின்போது கோவிலின் சிறப்பு மற்றும் தகவல்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

Next Story