நெல்லை: தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது
தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் ரகுமானியாபுரத்தை சேர்ந்தவர் ஷாநவாஸ் கான் (வயது 49). மேல கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் சீனி பாண்டியன் (32). இவர்கள் 2 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். 2 பேருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஷாநவாஸ்கான் அல்அமீன்நகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சீனி பாண்டியன், ஷா நவாஸ்கானிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி விட்டு ஓடி விட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஷா நவாஸ்கான் தனது நண்பரான அல் அமீன் நகர் பகுதியை சேர்ந்த காஜாமைதீன் (45) என்பவருடன் சேர்ந்து மேலப்பாளையம் சந்தை அருகே நின்று கொண்டிருந்த சீனி பாண்டியனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து ஷாநவாஸ் கானும், சீனி பாண்டியனும் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். 2 பேரும் அளித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷாநவாஸ் கான் அளித்த புகாரின் பேரில் சீனி பாண்டியனையும், சீனி பாண்டியன் அளித்த புகாரின் பேரில் ஷாநவாஸ் கான், காஜா மைதீன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story