மாணவி பாலியல் பலாத்காரம்; ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை-சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சேலத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சேலம்:
சேலத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
ஆட்டோ டிரைவர்
சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 48), ஆட்டோ டிரைவர். கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அந்த மாணவியை, மணி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுபற்றி வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக அந்த மாணவியை அவர் மிரட்டி உள்ளார். அந்த மாணவி இதுகுறித்து தனது தாயிடம் கூறினார். பின்னர் அவர் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
ஆயுள் தண்டனை
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் மணியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. மேலும் போலீசார் சார்பில் விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மணிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.37 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story