தமிழகத்தில் காலாவதியான 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்-லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் காலாவதியான 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
சேலம்:-
தமிழ்நாட்டில் காலாவதியான 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று லாரி உரிமையாளர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
சம்மேளன கூட்டம்
தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் வடிவேலு, செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சம்மேளன நிர்வாகிகள், ஊழியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி
முன்னதாக லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாஜலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் வாக்குறுதிப்படி டீசல் விலையை குறைக்கவும், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் காலாவதியான 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.
60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்படும் என்று மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மே மாதத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் மாநிலம் முழுவதும் வீதி, வீதியாக பிரசாரம் செய்யப்படும். இறுதியாக சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு முருகன் வெங்கடாஜலம் கூறினார்.
Related Tags :
Next Story