மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை சுடுகாட்டில் மரத்தில் தூக்கில் தொங்கினார்


மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை சுடுகாட்டில் மரத்தில் தூக்கில் தொங்கினார்
x
தினத்தந்தி 24 March 2022 2:24 AM IST (Updated: 24 March 2022 2:24 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டியில் மனைவி இறந்த சோகத்தில் சுடுகாட்டில் மரத்தில் தூக்கில் தொங்கி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கொண்டலாம்பட்டி:-
 மனைவி இறந்த சோகத்தில் சுடுகாட்டில் மரத்தில் தூக்கில் தொங்கி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கொண்டலாம்பட்டி அருகே நடந்த இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பூலாவரி கிராமத்தைச் சேர்ந்த தறி தொழிலாளி சக்திவேல் (வயது 30). இவர், உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மனைவி இறந்த சோகம்
விசாரணையில், சக்திவேலின் மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு சக்திவேல், தன்னுடைய தாய் சரோஜாவுடன் வசித்து வந்தார். ஆனாலும் மனைவி இறந்த பிறகு சக்திவேல் சோகத்துடன் காணப்பட்டுள்ளார். மனைவியை மறக்க முடியாமல் அடிக்கடி மது குடித்து வந்ததாக தெரிகிறது.
மனைவி இறந்த சோகத்தில் இருந்த சக்திவேல், சுடுகாட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் தூக்கில் தொங்கிய மரத்தின் அருகில் சக்திவேல் மோட்டார் சைக்கிள் நின்றுள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். மனைவி இறந்த சோகத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story