பொது வேலைநிறுத்த வாயிற்கூட்டம்


பொது வேலைநிறுத்த வாயிற்கூட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 2:48 AM IST (Updated: 24 March 2022 2:48 AM IST)
t-max-icont-min-icon

பொது வேலைநிறுத்த வாயிற்கூட்டம் நடைபெற்றது

ஜெயங்கொண்டம்
அனைத்து கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் வருகிற 28, 29-ந் தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தம் தொடர்பான வாயிற்கூட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக நேற்று நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் சம்பந்தம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் தனசிங் முன்னிலை வகித்தார். தொ.மு.ச. கிளை செயலாளர் சேகர் வரவேற்று பேசினார். கிளைத்தலைவர் கொளஞ்சி, சி.ஐ.டி.யூ. கிளைச் செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். முடிவில் தொ.மு.ச. கிளை துணைத்தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story