பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை; கரும்பு பயிர் சாய்ந்து நாசம்- மின் வயர் அறுந்து விழுந்ததில் தீப்பிடித்து வாழைகள் கருகின
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. தாளவாடியில் கரும்பு பயிர் சாய்ந்து நாசம் ஆனது. பவானியில் மின் வயர் அறுந்து விழுந்ததில் தீப்பிடித்து வாழைகள் கருகின.
ஈரோடு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. தாளவாடியில் கரும்பு பயிர் சாய்ந்து நாசம் ஆனது. பவானியில் மின் வயர் அறுந்து விழுந்ததில் தீப்பிடித்து வாழைகள் கருகின.
தாளவாடி
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வருகிறது. பகலில் அனல் காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி அளவில் மேகமூட்டம் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சூறாவாளிக்காற்று வீசியது. இந்த சூறாவளிக்காற்றால் திகினாரை, கரளவாடி, சேசன்நகர் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்து விழுந்தது.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. 5.45 மணி வரை மழை பெய்தது.
அப்போது சூறாவளி காற்றும் வீசியது. அதைத்தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
பவானி
பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை வெயில் கொளுத்தியது. பின்னர் 5 மணிக்கு வானம் திடீரென வானம் மப்பும் மந்தாரமுமாக மாறியது. கருமேகங்கள் சூழ்ந்ததுடன் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது.
சூறாவளிக்காற்று காரணமாக பவானியை அடுத்த ஜம்பை பகுதியில் மின்சார வயர் அறுந்து அந்த பகுதியை சேர்ந்த அருண் என்பவரின் தோட்டத்தில் விழுந்தது. இதில் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட வாழைகள் கருகி நாசம் ஆனது.
இதுபற்றி அறிந்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீ்ய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் மின்சார வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அறுந்து கிடந்த மின்சார வயரை அகற்றி மின்சாரம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு 7.30 மணி அளவில் அந்த பகுதியில் மின் வினியோகம் சரி செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
அம்மாபேட்டை
இதேபோல் அம்மாபேட்டையை அடுத்த சித்தார், கேசரிமங்கலம், குட்டை முனியப்பன் கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீசத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து ½ மணி நேரம் மழை பெய்தது. சூறாளிக்காற்றால் பல இடங்களில் கரும்பு பயிர்கள் சாய தொடங்கின.
Related Tags :
Next Story