பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
ஈரோடு விற்பனை குழுவில் 18 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய வணிக பயிர்களில் ஒன்றான மஞ்சளுக்கென, பெருந்துறை கருமாண்டிசெல்லி பாளையம் பேரூராட்சியில் 15 ஆயிரத்து 200 டன் கொள்ளளவு உடைய கிடங்குகள் உள்ளன. மேலும் இங்கு மஞ்சள் தரம் பிரிப்பு மையம், சூரிய உலர்த்தி மற்றும் நவீன சோதனை கூடங்களை உள்ளடக்கிய தரம் உயர்த்தப்பட்ட ஒருங்கினைந்த மஞ்சள் வணிக வளாகமானது கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
கொப்பரை தேங்காய் ஏலம்
புவிசார் குறியீடு பெற்றதும், உலகளவில் புகழ் பெற்றதுமான ஈரோடு மஞ்சளை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்திடவும் மின்னணு முறையில் ஏலம், மின்னணு பரிவர்த்தனை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த செயலி பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளை களையும் வகையில், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் ஆகியவை தொடங்கிவைக்கப்பட்டு உள்ளன.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவற்றை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் போக்குவரத்து செலவுகள் மற்றும் காலவிரயம் ஆகியவற்றை குறைக்கும் வகையிலும், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், வேளாண்மை இணை இயக்குனர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story