அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
அந்தியூர்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பூச்சாட்டப்பட்டது
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வந்தது.
முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுரமர்தனம் என்னும் அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த ஒரு எருமைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். பின்னர் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
அரக்கன் வதம்
இதைத்தொடர்ந்து அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சியாக எருமை, கிடாவை வெட்டி குண்டம் அருகே தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடினர். பின்னர் அந்த இடத்தில் நடுகல் நட்டு நடுகல்லுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அனைவரும் கோஷம் எழுப்பினர். காணிக்கையாக செலுத்தப்பட்ட மற்ற எருமைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வருகிற 30-ந் தேதி பகல் 11 மணி அளவில் கொடியேற்றுதல் நடைபெற உள்ளது. 31-ந் தேதியில் இருந்து தினமும் மாலை 7 மணி அளவில் பத்ரகாளி அம்மன் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
தேரோட்டம்
வருகிற 6-ந் தேதி அன்று குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 4 நாட்கள் தினமும் மாலை நேரங்களில் தேரோட்டம் நடைபெறும். பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்வார்கள். பாரிவேட்டை மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடையும்.
Related Tags :
Next Story