ஈரோடு மாவட்டத்தில் 54,406 பேர் வாங்கிய ரூ.259 கோடி நகைக்கடன் தள்ளுபடி- கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 54,406 பேர் வாங்கிய ரூ.259 கோடி நகைக்கடன் தள்ளுபடி- கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்
x
தினத்தந்தி 24 March 2022 4:07 AM IST (Updated: 24 March 2022 4:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 54 ஆயிரத்து 406 பேர் வாங்கிய ரூ.259 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 54 ஆயிரத்து 406 பேர் வாங்கிய ரூ.259 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் தெரிவித்து உள்ளார். 
நகைக்கடன்
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதில் முறைகேடு செய்தவர்களை கண்டறிந்துவிட்டு தகுதியானவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து நகைக்கடன் வாங்கி இருந்தவர்களின் முழு விவரங்களையும் கூட்டுறவு துறை அதிகாரிகள் சேகரித்து பரிசோதனை செய்தனர்.
இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்டு இருந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
ரூ.259 கோடி
இதுகுறித்து ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் 40 கிராமுக்கு உள்பட்டு நகைகளை அடமானம் வைத்தவர்களின் கடன் ரத்து செய்யப்படுகிறது. இந்த கடன் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு நிதி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தணிக்கை துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தி அனைத்து தகுதிகளையும் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 54 ஆயிரத்து 406 பேர் வாங்கிய ரூ.259 கோடியே 19 லட்சம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் தாங்கள் நகைக்கடன் பெற்ற சங்கங்களை நேரில் அணுகி நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு இணை பதிவாளர் ராஜ்குமார் கூறினார்.

Next Story