நெல்லை அருகே லாரி மோதி 22 ஆடுகள் சாவு
நெல்லை அருகே லாரி மோதி 22 ஆடுகள் பரிதாபமாக இறந்தன
பேட்டை:
நெல்லை அருகே லாரி மோதி 22 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
விவசாயி
நெல்லை அருகே உள்ள நடுக்கல்லூரைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). விவசாயியான இவர் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம்.
அதுபோல் நேற்று காலையில் நடுக்கல்லூர் ரெயில்வே கேட் பகுதியில் தனது ஆடுகளை ஓட்டிச் சென்றார்.
அப்போது, அந்த வழியாக நரசிங்கநல்லூர் பால்பண்ணை தெருவைச் சேர்ந்த தளவாய் மகன் சுவாமிநாதன் (28) என்பவர் சீதபற்பநல்லூரில் இருந்து லாரியில் கிரஷர் பொடியை ஏற்றி வந்து கொண்டு இருந்தார்.
22 ஆடுகள் சாவு
நடுக்கல்லூர் ரெயில்வே கேட் அருகே திருப்பத்தில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நாகராஜன் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற ஆடுகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 22 ஆடுகள் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. மேலும் 15 ஆடுகள் பலத்த காயம் அடைந்தன.
இதுகுறித்து சுத்தமல்லி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story