இடியும் நிலையில் உள்ள ரேஷன் பொருள் வழங்கும் கட்டிடம்


இடியும் நிலையில் உள்ள ரேஷன் பொருள் வழங்கும் கட்டிடம்
x
தினத்தந்தி 24 March 2022 4:11 PM IST (Updated: 24 March 2022 4:11 PM IST)
t-max-icont-min-icon

இடியும் நிலையில் உள்ள ரேஷன் பொருள் வழங்கும் கட்டிடம்

குன்னத்தூர் அருகே குறிச்சி ஊராட்சியில் சுமார் 700 குடியிருப்புகள் உள்ளது. இத்தகைய ஊராட்சியில் ரேஷன் பொருள் வழங்க ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. ரேஷன் கடையானது மிகவும் பழமை ஆகி இடியும் நிலையில் உள்ளது. நன்றாக இருக்கும் ரேஷன் கடையிலேயே எலி மற்றும் பெருச்சாளிகள் புகுந்து அரிசி போன்ற உணவு பொருட்களை வீணடித்து விடுகிறது. குறிச்சியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை யானது மிகவும் பழமையாக இடியும் நிலையில் இருப்பதால், ரேஷன் பொருள் வழங்க புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டுமாய் இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story