கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 March 2022 4:13 PM IST (Updated: 24 March 2022 4:13 PM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்போம், தனி நபர் சுதந்திரத்தை காப்போம், கொத்தடிமை தொழிலாளர் முறை சட்டப்படி ஒரு குற்றம். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம்  அமல்படுத்திய தினமான பிப்ரவரி மாதம் 9ந் தேதியை தமிழக அரசு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக  அறிவித்துள்ளது. இச்சட்டத்தை பற்றியும், இக்குற்றத்தை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தி தமிழகம் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துமாறு தொழிலாளர் ஆணையர்  அதுல் ஆனந்த் உத்தரவிட்டார். 
அதன்படி திருப்பூர் கலெக்டர் வினீத் அறிவுரைப்படி கடந்த 11ந் தேதி முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் கைக்கப்பட்டது. கடந்த  22ந் தேதி கொத்தடிமைத் தொழிலாளர் விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கம் கலெக்டரால் தொடங்கி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. நேற்று முன்தினம்  திருப்பூரில் உள்ள ஓட்டல் மணியம் கிளாசிக் ஹாலில் கொத்தடிமைத் தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு பட்டறை நடத்தப்பட்டது. அதில் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் இரா. மலர்கொடி  கலந்து கொண்டுசிறப்புரையாற்றினார். மேற்படி பட்டறையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். மாலையில் அந்தியூர் அகரம் சேவா சங்கம் கலைக்குழுவினரால் திருப்பூர் குமரன் நினைவு மணி மண்டபம் அருகில் தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் ஆகியவற்றின் மூலம் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
----

Next Story