வீரபாண்டி பிரிவில் போக்குவரத்து நெரிசல்


வீரபாண்டி பிரிவில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 24 March 2022 4:15 PM IST (Updated: 24 March 2022 4:15 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி பிரிவில் போக்குவரத்து நெரிசல்

ிருப்பூர்பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவில் அரசு கால்நடை துறைக்கு சொந்தமான இடத்தில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாகன ஆய்வு, எப்.சி. மற்றும் லைசென்ஸ் வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு போதிய இடவசதி இல்லாததால் நொச்சிபாளையம் பிரிவில் இருந்து அல்லாலபுரம் செல்லும் சாலையில் தனியார் இடத்தில் தற்காலிகமாக நடந்து வருகிறது. தினமும் வாகன ஆய்வு பணிக்காக ஏராளமான வாகனங்கள் அல்லாலபுரம் செல்லும் சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது   திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் பல வருடங்களாக தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் அல்லாலபுரம் செல்லும் சாலையில் தனியார் இடத்தில் வாகன ஆய்வு நடைபெறுகிறது இதன் மூலம் அவ்வழியாக வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் கடந்து செல்ல மிகவும் பயணிகள் அச்சப்படுகின்றனர். விபத்துக்கள் ஏற்படும் முன்பாக நடவடிக்கை தேவை என்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.விரைவாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இடத்தை தேர்வு செய்து இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றனர். 

---

Next Story