பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்


பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 24 March 2022 4:20 PM IST (Updated: 24 March 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்

 சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் பட்டறை அமைத்து விவசாயிகள் சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்கிறார்கள்.
சின்னவெங்காயம் 
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. இந்த பகுதி விவசாயிகளின் முக்கிய விவசாயமாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த கார்த்திகை மாதத்தில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர். வெங்காய அறுவடை நடைபெறும் சூழ்நிலையில் வெளி மாவட்டங்கள், மற்றும் கர்நாடகாவில் இருந்து வெங்காயம் வரத்து உள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இது குறித்து விவசாயி நொச்சிபாளையம் பாலசுப்பிரமணியம் கூறியதாவது
 ஒரு ஏக்கர் வெங்காயம் பயிரிட விதை வெங்காயம், உரம், பூச்சி மருந்து, நடவு கூலி, அறுவடைக் கூலி என ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகிறது. நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 6 டன் வெங்காயம் கிடைக்கும், ஆனால் 4 முதல் 5 டன் வரை வெங்காயம் விளைச்சல்கிடைக்கிறது.  கார்த்திகை மாதத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது வெங்காயம் பயிரிட்டுள்ள எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. 
அரசு கொள்முதல் செய்ய வேண்டும்
ஏனென்றால் கிலோ 50 ரூபாய்க்கு விற்றால் தான் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் லாபம் கிடைக்கும். தற்பொழுது கிலோ 15 ரூபாய்க்கு விற்பதால் ஏக்கருக்கு ரூ. 30ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பட்டறை அமைத்து இருப்பு வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

------------


Next Story