குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்


குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 March 2022 4:28 PM IST (Updated: 24 March 2022 4:28 PM IST)
t-max-icont-min-icon

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

குன்னத்தூர் அருகே புதுப்பாளையம் ஊராட்சி சூரியப்பன் பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் ரோட்டில் தார் பெயர்ந்து, கற்கள் பரவி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பள்ளிக்கு செல்லும் ரோட்டை புதுப்பித்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பள்ளிக்கு செல்லும் மாணவமாணவிகளும், அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Next Story