என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
திருமுல்லைவாயல் அருகே என்ஜினீயரிங் பட்டதாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயரிங் பட்டதாரி
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்த்(வயது 26). பி.டெக் பட்டதாரி. கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக அவரது வீட்டில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டு மாடியில் இருந்து நீண்ட நேரமாக கீழே வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை சுப்பாராவ் மேலே சென்று பார்த்தபோது, ஆனந்த் மின்விசிறியில் நைலான் கயிற்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சாவு
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை கீழே இறக்கி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 108 ஆம்புலன்சு ஊழியர்கள் வந்த பிறகு அவர்கள் ஆனந்தை பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார் பலியான ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் என்ஜினீயரிங் பட்டதாரி சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story