ஆதித்தனார் கல்லூரி சார்பில் தேரிக்குடியிருப்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி சார்பில் தேரிக்குடியிருப்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி 48 சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தேரிக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த 21-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘தூய்மை பணியில் இளைஞர்களின் பங்கு' என்ற வகையில் இம்முகாம் நடைபெற்று வருகிறது. தேரிக்குடியிருப்பு பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேசுவரன், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story