பிணைப்பத்திரத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை


பிணைப்பத்திரத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை
x
தினத்தந்தி 24 March 2022 6:09 PM IST (Updated: 24 March 2022 6:09 PM IST)
t-max-icont-min-icon

மெஞ்ஞானபுரம் அருகே பிணைப்பத்திரத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

மெஞ்ஞானபுரம்:
திருச்செந்தூர் உதவி கலெக்டரிடம் எழுதி கொடுத்த பிணைப்பத்திரத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபருக்கு மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
பிணைப்பத்திரம்
மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள கல்விளைகோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் இரட்டைமுத்து (வயது 38). கடந்த டிசம்பர் 9-ந் தேதி குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப் பிரிவு 110-ன் படி திருச்செந்தூர் உதவிகலெக்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தி, இரட்டைமுத்துவிடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் 6 மாத காலத்திற்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி கொடுத்து ரூ.10ஆயிரத்துக்கான பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். 
பெண் மீது தாக்குதல்
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள கல்விளை வழுக்கைகுளம் பகுதியில் நகனையைச் சேர்ந்த சுடலை மனைவி மூக்கம்மாள் (55) என்பவரை முன்விரோதம் காரணமாக கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் போலீசார் இரட்டைமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து பிணைப்பத்திரத்தை மீறி 6 மாத காலம் முடிவதற்குள் இரட்டைமுத்து குற்ற செயலில் ஈடுபட் டுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். 
மேலும் 6 மாதம் ஜெயில்
இதனையடுத்து மெஞ்ஞானபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பட்டாணி இரட்டைமுத்து மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்பிரிவு 110-ன் படி நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் உதவிகலெக்டர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து ஏற்கனவே கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரட்டைமுத்துவை வரும் டிசம்பர் 8-ந்தேதி வரை சிறையில் அடைக்க திருச்செந்தூர் உதவி கலெக்டர் உத்தரவு நகல் மெஞ்ஞானபுரம் போலீசாரால் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.


Next Story