28ந்தேதி முதல் டீ ரூ12 காபி ரூ20
28ந்தேதி முதல் டீ ரூ12 காபி ரூ20
ிருப்பூர் மாவட்டத்தில் வருகிற 28ந்தேதி முதல் டீ ரூ.12 காபி ரூ.20க்கு விற்கப்படும் என்று பேக்கரி, சுவீட்ஸ் மற்றும் டீ, காபி பார் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய சங்கம் தொடக்கம்
திருப்பூர் மாவட்ட பேக்கரி, சுவீட்ஸ் மற்றும் டீ, காபி பார் உரிமையாளர்கள் சங்கத்தின் (கட்சி சார்பற்றது) தொடக்க விழா நேற்று காலை திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ரமணாஸ் ஹாலில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கவுரவ தலைவராக ரவீந்திரன், தலைவராக ராஜ்குமார், செயலாளராக அப்துல் சலாம், பொருளாளராக கண்ணன், நிர்வாக செயலாளராக கமலபாஸ்கர், துணை தலைவர்களாக குணசேகரன், அருண் மனோஜ், இணை செயலாளர்களாக சரவணன், நவ்சாத், துணை செயலாளர்களாக சிவசண்முகம், திலக், துணை பொருளாளர்களாக முத்துக்குமார், சிவக்குமார், பாரி கணபதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
டீ, காபி விலை உயர்வு
கூட்டத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர், பால் உள்ளிட்டவைகளின் விலையேற்றம் காரணமாக வருகிற 28ந்தேதி முதல் சங்கத்தின் மூலம் டீ, காபி ஆகியவை விலை உயர்வு செய்யப்படுகிறது. அதன்படி டீ ரூ.12க்கும், காபி ரூ.20க்கும், லெமன் டீரூ.15க்கும், பலகாரங்கள்ரூ.8-க்கும், வெஜ் பப்ஸ்ரூ.15க்கும், முட்டை பப்ஸ்20க்கும், காளான் பப்ஸ்ரூ.20க்கும், 1 பார்சல் டீரூ.40-க்கும், ½ பார்சல் டீ-ரூ.30-க்கும், 1 பார்சல் காபிரூ.50-க்கும், காபி ரூ.40க்கும் விற்பனை செய்ய வேண்டும்.
உணவு பாதுகாப்பு சட்டத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தலைவர் ராஜ்குமார் பேசும்போது, ‘சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். டீ, காபி உள்ளிட்ட பொருட்களின் அடிப்படை விலை உயர்வை அனைவரும் கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
-------------
Related Tags :
Next Story