மனுநீதி நாள் முகாம்


மனுநீதி நாள் முகாம்
x
தினத்தந்தி 24 March 2022 7:34 PM IST (Updated: 24 March 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

அருங்குணம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட அருங்குணம், மாவளவாடி, சத்தியவாடி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் அருங்குணம் கிராமத்தில் நடைபெற்றது. 

தாசில்தார்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
திருவண்ணாமலை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி, 153 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தெய்வசிகாமணி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இடுபொருள்கள் வழங்கினார்.

ஊட்டச்சத்து மற்றும் குழந்தை நல அலுவலர் மரியம்மாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 

முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தாராமன், ஏழுமலை, பத்மினி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story