கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாளமுத்துநகர் ஆரோக்கியபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ராஜா என்ற நாகூர் ஹனிபா மகன் பின்லேடன் (வயது 20), தூத்துக்குடி, கோவில் பிள்ளை விளையை சேர்ந்த சொரூபன் மகன் எபனேசர் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story